திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அரசு உறுதி அளிக்க வலியுறுத்தல்
ADDED :1 days ago
குன்னுார்: திருப்பரங்குன்ற தீபதுாணில் தீபமேற்ற வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் மாநில அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.
நீலகிரி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி கூறுகையில்,‘‘வரும், 22ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப துாணில், மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்தும் வகையில், தீபம் ஏற்ற அரசு உறுதி அளிக்க வலியுறுத்தி, ஊட்டியில் இருந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன,’’ என்றார். மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ஹரிஹரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சதீஷ், சசி உட்பட நிர்வாகிகள் பலர் முதல்வருக்கு குன்னுார் தபால் நிலையத்திலிருந்து, கடிதங்களை அனுப்பினர்.