வாய்மூடி சித்தர் கோவில் ஜப்பான் நாட்டினர் வழிபாடு
ADDED :7 hours ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வாய்மூடி சித்தர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் வழிபாடு செய்தனர்.
சேத்தியாத்தோப்பு கனகரத்தினர் தெரு சந்தைத்தோப்பு வளாகத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த, வாய்மூடி சித்தர் கோவில் உள்ளது.
இங்கு குருபூஜை, வியாழன் சிறப்பு பூஜை, அபிேஷகம், ஆராதனை என பல்வேறு வழிபாடுகள் நாள்தோறும் நடந்து வருகின்றன.
இந்த கோவிலில், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், சித்தர் பற்றி அறிந்த ஜப்பான் நாட்டின் கியோட்டா நகரத்தை சேர்ந்த டைக்கோ, மிசாடோ, கோபே நகரத்தை சேர்ந்த சியாக்கோ உள்ளிட்டோர், இங்கு வந்து வாய் மூடி சித்தரை வழிபாடு செய்தனர்.