sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

14

முந்தைய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1037

SC seeks Centres response on PIL for sensitising people about rape, sexual offences

Kalvimalar News

14-Sep-2024

மேஷம்; அசுவினி: எடுக்கும் முயற்சி எதுவாக இருப்பினும் அதில் வெற்றிகண்டு வரும் உங்களுக்கு, இந்த மாதம் நன்மையான மாதம். உங்கள் வேலை விறுவிறுவென நடந்தேறும். உடலில் இருந்த நோய் நொடிகள் விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். எதிரி உங்களிடம் பணிந்து செல்லும் நிலை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நீடித்துவந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். எல்லா வகையிலும் உங்களுடைய செல்வாக்கு உயரும். உங்கள் ராசிநாதனால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். அதனால் பலமடங்கு லாபமும் அடைவீர்கள். துணிச்சல், தைரியமாக செயல்பட வேண்டிய மாதம் இது. இறையருளும், குலதெய்வ அருளும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு வர எல்லா வகையிலும் நன்மை காண முடியும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தன காரகனால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் லாபம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மறைந்திருந்த  செல்வாக்கு வெளிப்பட ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு இந்த மாதம் அதற்குரிய வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலாளர்கள் நிலை முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு முயற்சி வெற்றி அடையும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதம். எதிர்பார்த்த வரவு இருக்கும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு நினைத்ததையெல்லாம் சாதித்திடக்கூடிய நிலை உருவாகும். சந்திராஷ்டமம்: அக். 6,7. அதிர்ஷ்ட நாள்: செப். 18, 25, 27. அக். 19, 16.பரிகாரம்: விநாயகரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.பரணி: தைரியமாக, வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். சூரிய பகவான் உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். அரசு வழியில் நிறைவேறாமல் இருந்த வேலைகளை முடித்து வைப்பார். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். தொழிலில் இருந்த போட்டி நீங்கும். எதிரி விலகும் அளவு உங்களுடைய செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி என்று தேடிவரும். நினைத்ததை சாதித்திடக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும். ராசியாதிபதியால் வருமானத்திற்கு எந்த வகையிலும் குறைவிருக்காது. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ப பணம் பெருகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். அலுவலகப் பணியில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைப்பதற்கு இந்த மாதத்தில் வாய்ப்புகள் உள்ளன. குரு பகவானின் பார்வையால் பிரகாஷம் அடைவீர்கள். தொழிலில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வரவு அதிகரிக்கும் என்ற நிலையில், செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணம் லாபத்தை ஏற்படுத்தும். உழைப்பாளர், விவசாயி, கலைஞர்கள் நிலை முன்னேற்றம் அடையும். பெண்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: அக். 7, 8.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும்.கார்த்திகை 1 ம் பாதம்: பிறரை வழிநடத்தும் திறன் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் செல்வாக்கான மாதம். உங்கள் ராசிநாதன் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திலும், நட்சத்திர நாதன் ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்க்காத அளவிற்கு நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும். உங்களுடைய ஆற்றல் இப்பொழுதுதான் உங்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும். மற்றவர்கள் உங்களைப் பெருமையுடன் பார்க்கின்ற நிலை உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் பெற்றவராக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். எந்த வேலையை எடுக்கின்றீர்களோ அந்த வேலையில் உங்களுக்கு லாபம் காத்திருக்கிறது. தோல்வி, எதிர்ப்புகளும் இல்லை என்றே சொல்லலாம். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். பணியிடப் பிரச்னை முடிவிற்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் திருந்துவார்கள். புதிய பாதையில் உங்கள் பயணம் செல்லும். தொழில், வியாபாரம், அரசியல் என நீங்கள் ஈடுபடும் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் நிலை இந்த மாதம் யோகமாக இருக்கும்.  விருப்பம் நிறைவேறும். விவசாயிகளின் வாழ்க்கை வளமாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடு லாபத்தை உண்டாக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். இந்த மாதம் அனைவருக்குமே யோக மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: அக். 8.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 19, 27, 28. அக். 1, 9, 10.பரிகாரம்: சூரியனை வழிபட வாழ்வில் வளம் கூடும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் ; எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் திறமை படைத்த உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நினைத்ததை அடையும் மாதம். உங்கள் நட்சத்திர நாதன் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவானுடன் 5 ம் இட அதிபதி புதனும் இணைகிறார். அதனால், எந்த ஒன்றிலும் நிதானமாக இக்காலத்தில் செயல்படுவது அவசியம். இருந்தாலும், பெருமளவில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. குரு பகவானின் பார்வை ஐந்தாம் இடத்திற்கு உண்டாவதின் காரணமாக குல தெய்வ அருளும் உங்களுக்கு உண்டாகி எந்த ஒன்றிலும் நினைத்ததை அடையும் நிலை உண்டாகும். 6.10 முதல், புதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் லாபம் கூடும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவீர்கள். கைமேல் பலனாக புதிய சொத்து வாங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி எளிதில் வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு வரும். புகழ் அதிகரிக்கும். மாணவர்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். படிப்பில் அக்கறை கூடும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் ஏக்கம் தீரும். தெய்வீகத் தலங்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுகின்ற நிலை உருவாகும். இந்த மாதத்தில் சின்னச் சின்ன தடை உண்டானாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: அக். 9.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 24, 28. அக். 1, 6, 10, 15.பரிகாரம் கோமதி அம்மனை வழிபட குறை தீரும். நன்மை உண்டாகும்.ரோகிணி:  மன வலிமையுடன் செயல்பட்டு, எதிலும் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு பகவான் உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி இலாபத்தை உண்டாக்கும். பணியாளர்களால் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட  வேலை நடக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். சுய தொழில் செய்து வருபவர்கள் நிலை உயரும். வார்த்தைகளின் வழியே சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். ஜென்ம குரு அலைச்சலை அதிகரித்தாலும் பல வழியிலும் ஆதாயத்தை தருவார். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவருக்கு தகுதியான வரன் அமையும். தந்தை வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்படுவீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வீடு கட்டும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பெண்கள் நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: அக். 9, 10.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 24, 29. அக். 2, 6, 11, 15.பரிகாரம்: திங்களூர் சந்திர பகவானை வழிபட மனம் தெளிவாகும். முயற்சி வெற்றியாகும்.மிருகசீரடம் 1, 2 ம் பாதம்: ; அதிர்ஷ்டத்துடன் வாழ்பவராக பிறப்பெடுத்த உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் முயற்சிகளால் முன்னேற்றம் காணும் மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் குரு பகவான் 5, 7, 9 ம் இடங்களைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும் பெரியோரின் ஆதரவு ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவை நிறைவேறும். உங்கள் நட்சத்திரநாதன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. இக்காலத்தில் தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சாதுரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை இல்லாமல் போகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவும் நண்பர்களின் ஒத்துழைப்பும் உங்கள் நிலைக்கு கைகொடுக்கும். நினைத்த காரியங்களை நடத்திக் கொள்ளக்கூடிய சக்தி உண்டாகும். மாதத்தின் கடைசியில் தேவையற்ற ஆசைகளால் பொருள் இழப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும். கலைஞர்கள், பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள் நிலை உயரும். வரவு திருப்தி தரும்.சந்திராஷ்டமம்: அக். 10.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை அதிகரிக்கும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; வாழ்வில் குறிக்கோள் எது என்பதை தெரிந்து கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் போராடி வெற்றி பெறும் மாதம். எந்தவொரு செயலிலும் இந்த மாதம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்ப்பு குருபகவானால் நிறைவேறக்கூடும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடமே வந்து சரண் அடைவர். வழக்கு விவகாரம் சாதகமாகும். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக்கொள்வீர். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் வரும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விரய செலவுகளும் ஒரு சிலருக்கு காத்துக் கொண்டிருக்கிறது. ராசிக்குள் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் ஏதேனும் சின்னச் சின்ன பிரச்னை, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக நிதானமாக செயல்படுவதும், பிறரை அனுசரித்துச் செல்வதும் இந்த மாதம் உங்களுக்கு நல்லது. சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். மேலைநாட்டு முயற்சிகள் இந்த மாதத்தில் லாபத்தை உண்டாக்கும்.சந்திராஷ்டமம்: அக். 11அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.பரிகாரம்: திருவல்லிக்கேணி வேங்கடக்கிருஷ்ணரை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.திருவாதிரை: நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும், புத்திசாலித்தனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் உங்கள் முயற்சிக்கு ஏற்ற மாதம். உங்கள் ஜென்ம ராசிக்குள் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. அவசர வேலை எதுவாக இருந்தாலும் அதிலும் கவனம் வேண்டும். ஜீவன ஸ்தானத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். வெளிநாட்டு தொடர்பு நன்மையை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி, சங்கடம் விலக ஆரம்பிக்கும். சூரிய பகவான் சஞ்சரித்து வருவதால் வேலைபளு ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கேற்ற வருமானமும் இருக்கச்செய்யும். குரு பகவானின் பார்வையால் சங்கடம் இல்லாமல் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் அடைய முடியும். 19.9 முதல் 14.10 வரை சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வாழ்க்கைத் துணையால் அனுகூலம், லாபம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் 19.9 முதல் 5.10 வரை நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கல்வியாளர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். புதிய பொறுப்பு, பதவி என்ற நிலை ஒரு சில அரசியல்வாதிகளுக்கு ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை மறையும். புதிய சொத்து வாங்க முயற்சித்தவர்களின் கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: அக். 11, 12.அதிர்ஷ்ட நாள்: செப். 22, 23, 31. அக். 4, 5, 13, 14.பரிகாரம்: வைகுண்ட நாதரை வழிபட நினைத்தது நிறைவேறும்.புனர் பூசம் 1, 2, 3 ம் பாதம் : வாழ்க்கைப் பற்றிய ஞானமும், கல்வி அறிவும் கொண்டு பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை மூன்றும் உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். சுக ஸ்தானத்திற்கு அவருடைய பார்வை உண்டாவதால் நெருக்கடி விலகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். வீடு கட்டுவதற்காக நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தபோதும் அது நிறைவேறாமல் போயிருந்த நிலையில்  அதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். தொழில் ரீதியாக ஏற்பட்ட விரோதம், போட்டி மறையும். வழக்கு சாதகமாகும். மறைந்திருந்த உங்களுடைய செல்வாக்கு, அந்தஸ்து, புகழ் எல்லாம் மீண்டும் வெளிப்படும். சமூகத்தில் மரியாதைக்குரிய நபராக வெளிவருவீர். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக்கொள்வீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். சாதுரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வரவு வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபம் வெளிப்படும். நிதானமாக செயல்பட்டு அதனால் நன்மைகள் காண வேண்டிய மாதம் இது. அரசியல்வாதிகளுக்கு இது யோகமான மாதம். திட்டமிட்டு செயல்படுவோருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: அக். 12அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 3, 5, 14.பரிகாரம்: குரு பகவானை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.

கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்;  தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் பொன்னான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும். உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற ஆரம்பிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து மேம்படும். தெய்வ அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். கௌரவம், பெருமை என்ற நிலை ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பிரிந்து சென்ற நண்பர்கள் தேடி வந்து உதவி செய்கின்ற நிலை உருவாகும். புதனின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கடனாக கேட்ட பணம் கிடைக்கும். வரவு பல வகையிலும் அதிகரிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நெருக்கடி விலகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வழக்கு சாதகமாகும். பதவி உயர்வில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய மாதம் இது. சந்திராஷ்டமம்: அக். 13.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 21, 29, 30. அக். 2, 3, 11, 12.பரிகாரம்:  திருவல்லீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் கூடும். நலம் உண்டாகும்.பூசம்: நினைத்த வேலையை முடிப்பதில் உறுதியும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், கேதுவினால் நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபத்தில் முடியும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இத்தனை நாட்களும் தடைபட்டு வந்த வேலை விறு விறுவென நடக்கும். தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி என ஒரு சிலருக்கு கிடைக்கும். லாப குருவால் உங்களுக்குத் தேவையான வருவாய் வரும். தொழில் வியாபாரம் லாபத்தை நோக்கிச் செல்லும். இருந்தாலும், விரய ஸ்தானத்தில் ஜீவனாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவு செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது. புதியனவற்றில் முதலீடு செய்வதற்கு முன் நன்றாக தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் ஒவ்வொன்றையும் தங்கள் நேரடிப் பார்வையில் செய்வது அவசியம். குடும்பத்தில் இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். மணமாலை சூடும் நேரம் கனிந்து வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுக்கிரனின் சஞ்சார நிலைகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வரவு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடை விலகும்.சந்திராஷ்டமம்: செப். 17. அக். 13, 14.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 26, 29. அக். 2, 8, 11, 16.பரிகாரம்: அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரரை வழிபட எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.ஆயில்யம் : பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம்.  உங்கள் நட்சத்திரநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உங்களால் அடைய முடியும். கேட்ட பணம் கைக்கு வரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். ஒரு சிலர் வீடு கட்டும் வேலையில் இறங்குவீர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழிலில் இருந்த தடை விலகும். உற்பத்தி அதிகரிக்கும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். குரு, சூரியன், கேதுவால் உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களின் நிலை உயரும். கோரிக்கை வெற்றியாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியில் தடைபட்டு வந்த வேலை இக்காலத்தில் நிறைவேறும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமணத்திற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும்.சந்திராஷ்டமம்: செப். 17, 18. அக். 14.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23, 29. அக். 2, 5, 11.பரிகாரம்:  திருவாலங்காடு வடாரண்யேசுவரரை வழிபட வழக்கு விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.

சிம்மம்: மகம்; மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். கேது, சூரியன் இருவரும் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில், என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம். இருந்தாலும், குரு பகவானின் பார்வையால் நடப்பவை எல்லாம் நன்மையிலேயே முடியும். கடந்த மாதத்தின் நெருக்கடி எல்லாம் ஒவ்வொன்றாக விலகும். நினைத்ததை உங்களால் சாதித்துக்கொள்ள முடியும். உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இருப்பினும், மறைந்த செல்வாக்கு வெளிப்படும். உங்கள் திறமையை உலகம் அறியும். மாதம் முழுவதும் சுக்கிர பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடி விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். கொடுத்த வாக்கை இந்த மாதத்தில் காப்பாற்றுவீர்கள். நிம்மதியாக வாழ்ந்திடக் கூடிய நிலையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். மாணவர்கள் படிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய பொருள் சேரும். வம்பு வழக்குகள், எதிர்ப்புகள் என்றிருந்த நிலையெல்லாம் மாற்றம் பெறும். உங்களுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைத்ததை உங்களால் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதமாக இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கூடுதலாக கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். தொழிலாளர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தோன்றும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். விவசாயிகளுக்கு இந்த மாதம் ஆதாயமான மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: செப். 18, 19. அக். 15, 16.அதிர்ஷ்ட நாள்: செப். 25, 28. அக். 1, 7, 10.பரிகாரம்:  பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட உங்கள் வாழ்வில் நன்மை உண்டாகும்.பூரம்: சாதிப்பதில் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் முன்னேற்றமான மாதம்.  நட்சத்திர நாதன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் மேற்கொள்ளும் வேலை ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலக ஆரம்பிக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடித்துக் கொள்ளும் ஆற்றல் பிறக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாலினர் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் ஏற்பட்டு வந்த நெருக்கடி விலகும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். பொருளாதார நெருக்கடி விலகும். வாக்கு ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. எதிலும் அவசரம் என்பது வேண்டாம். அது சில படிப்பினைகளுக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகவும், நேர்மையாகவும் செயல்படுவதால் நன்மை அடைய முடியும். இல்லையெனில், அரசு வழியில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இந்த நேரத்தில் குரு பகவானின் பார்வையால் பண வரவிற்கு குறைவிருக்காது. வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். தாய் வழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். புதிய வீடு கட்டும் முயற்சியில் ஒரு சிலர் இறங்குவீர். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது அவசியம். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நன்மை அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: செப். 19. அக். 16, 17.அதிர்ஷ்ட நாள்: செப். 24, 28. அக். 1, 6, 10, 15.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: திறம்பட செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நீங்கள் நினைப்பது நிறைவேறும் மாதம். செவ்வாய் பகவான் மாதம் முழுவதும் எதிர்பார்த்த வருவாய், முன்னேற்றம் என்பதெல்லாம் இந்த மாதத்தில் தர இருக்கிறார். கடந்த மாத நெருக்கடி விலகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், காவல்துறை, ஹோட்டல், விவசாயம், மெடிக்கல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு யோகமான மாதம். தடைபட்ட வேலை நடக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். வேலைப் பார்த்து வரும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை மங்கலத்தை உண்டு பண்ணும். நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் நடத்திக் கொள்ள முடியும். பணவரவில் இருந்த தடை விலக ஆரம்பிக்கும். வர வேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியில் முடியும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். வியாபாரம் தொழிலில் இருந்த போட்டி, எதிர்ப்பு விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதலாக அக்கறை செலுத்துவது நல்லது. தொழிலாளர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதம். வரவு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: செப். 20. அக். 17.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 28. அக். 1, 10.பரிகாரம் அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் கூடும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்; துணிச்சலாக செயல்பட்டு வெற்றியடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் சிறப்பான மாதம். உங்கள் ஜென்ம ராசிக்குள் கேதுவும், சூரியனும் இணைந்திருந்திருப்பதால் முன்னோர் வழிபாடு திருப்தி தரும். முயற்சி வெற்றியாகும். ராகுவினால் நண்பர்களின் சுயரூபம் தெரியும். கூட்டுத் தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். குரு பகவானின் 5 ம் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் எந்தவிதமான சங்கடம் உங்களுக்கு வந்தாலும் அவை வந்த வழி தெரியாமல் போய்விடும். உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து எல்லாம் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்டு வந்த வேலை ஒவ்வொன்றாக நடைபெறும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் உங்களுடைய தொழில் ரகசியங்கள் எதையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம். மாதம் முழுவதும் சுக்கிரனும், புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.சந்திராஷ்டமம்: செப். 20.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 23, 28. அக். 1, 5, 10, 14.பரிகாரம்: ஆட்சிபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அஸ்தம்: நினைத்ததை சாதித்துக் கொள்ளும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். குரு பகவானின் பார்வை வாழ்க்கையில் இருந்த சங்கடங்களை இல்லாமல் செய்யும். திறமை இப்போது வெளிப்படும். உங்களை அலட்சியம் செய்தவர்கள் திரும்பிப் பார்த்திடும் வகையில் நிலை உயரும். செல்வாக்கு, அந்தஸ்து எல்லாம் அதிகரிக்கத் தொடங்கும். எதிர்பார்த்து வந்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். உங்களுடைய கோரிக்கை  நிறைவேறும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வழியில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.  குழந்தை பாக்கியத்திற்காக நீண்ட நாட்களாக முயற்சித்து வந்தவர்களுக்கு தெய்வ அருளால் நல்ல தகவல் கிடைக்கும். ராசிநாதன் புதன், மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வாங்குவது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் பெறுவது என்பதெல்லாம் இந்த மாதத்தில் நடந்தேறும்.  யாரையும் நம்பி எந்தவொரு பொறுப்பையும் இந்த மாதத்தில் ஒப்படைக்க வேண்டாம். வேலைப்பற்றிய சிந்தனை எப்பொழுதும் உங்களுக்குள் இருக்கும். ஒரு உந்து சக்தியாக இருந்து சூரியன் உங்களைச் செயல்பட வைப்பார். அதனால், ஓய்வு உறக்கம் என்பதை எல்லாம் மறந்து செயல்பட்டு முன்னேற்றத்தை அடையக்கூடிய நிலையும் ஒரு சிலருக்கு உண்டாகும். பொதுவாக இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொன்னான மாதம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். விவசாயிகள் தொழிலாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: செப். 20, 21.அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23, 29. அக். 2, 5, 11, 14.பரிகாரம்: சொர்ணபுரீசுவரரை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்: மன உறுதியுடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். உங்கள் ராசிநாதனால் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். மற்றவரால் பாராட்டப்படுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரம் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வருமானம் உயரும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடி விலகும். சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய நிலை வரும். கவனம் தேவை.  பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு செய்வதற்குமுன் பலமுறை நன்றாக யோசித்து அதன் பிறகு செய்வது நல்லது.  குரு பகவானின் பார்வை உங்களின் தடைகளை தவிடுபொடியாக்கும். இதனால் உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது நிறைவேறும். தடைபட்ட வேலை நடக்கும். உறவுகள் உங்களைத் தேடிவரும் நிலை உண்டாகும்.ராகுவால் நன்மை அதிகரிக்கும். புதிய நட்புகளிடம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாலினர் விஷயத்தில் ஓரடி தள்ளியே இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். வழக்கமான வேலைகள் எல்லாம் உங்களுக்கு லாபத்தை உண்டாக்கும் என்பதால் அதில் மட்டும் கவனத்தை செலுத்துவதும், உத்தியோகத்தில் கவனமாக இருப்பதும் நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். சந்திராஷ்டமம்: செப். 22.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.பரிகாரம்: சொர்ண காளீஸ்வரரை வழிபட வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.

துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்; முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் சிறப்பான மாதம். மாதம் முழுவதும் உங்களுக்கு ராசிநாதன் ஆதாயத்தை வழங்குகிறார். அதனால், பொருளாதார நெருக்கடி விலகும். தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் லாபத்தை எட்டும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். சூரியன், கேது, குரு பகவானின் பார்வையால் எல்லாம் சுபமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. எந்த ஒன்றிலும் இக்காலத்தில் அவசரம் காட்ட வேண்டாம். இடம் வாங்குவது, விற்பது போன்ற விவகாரங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். விவசாயிகள் தங்கள் வேலையில் முழுமையான அக்கறை செலுத்தி வருவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் நிதானம் தேவை. தலைமையை அனுசரித்துச் செல்வது அவசியம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாக காரணங்களால் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். நேரம், காலம், சூழ்நிலை அறிந்து செயல்படுவதும் பிறரை அனுசரித்துச் செல்வதின் வழியாகவும் எதிர்பார்த்த நன்மைகளை அடைய முடியும்.குடும்பத்தில் குழப்பம் குறைந்து மனநிறைவு ஏற்படும். சந்திராஷ்டமம்: செப். 22.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.பரிகாரம்: சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட சங்கடம் விலகும்.சுவாதி: நினைத்ததை அடையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாதம் புரட்டாசி மாதம் யோகமான மாதம். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். சமூகத்தில் தனி அந்தஸ்தும் செல்வாக்கும் உண்டாகும். உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சுக்கிரன் வழங்குவார். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் உண்டாகும். புதிய சொத்து சேர்க்கையும், பொன் பொருளும் சேரும். ஒரு சிலர் இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு வேறு வசதியான வாகனம் வாங்குவீர். அரசு விவகாரங்களில் வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேறு வித ஆசைகளுக்கும் வருமானத்திற்கும் இந்த நேரத்தில் இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. அரசாங்கத்தின் கழுகுப் பார்வை இந்த நேரத்தில் உங்கள் மீது இருக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் சுபச்செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பாக்ய ஸ்தான செவ்வாயால் விவசாயத்திலிருந்த குளறுபடி விலகும். லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இப்பொழுது முடிவிற்கு வரும். விரும்பிய இடத்தை வாங்குவதற்கு வாய்ப்பு வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். குரு பகவானின் பார்வை தன ஸ்தானத்திற்கு உண்டாவதால் செலவுகளை சமாளித்திடக்கூடிய அளவிற்கு வரவு வரும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது நல்லது.சந்திராஷ்டமம்: செப். 23.அதிர்ஷ்ட நாள்: செப். 22, 24. அக். 4, 6, 13, 15.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட்டு வர வாழ்வில் வளம் உண்டாகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம் : செயல்களில் நிதானமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். குருப் பார்வையால் விரய செலவு கட்டுப்படும். நெருக்கடி நீங்கும். வாழ்வில் இருந்த பயம் போகும். நீங்கள் செலவு செய்யும் பணம் ஒவ்வொன்றும் ஆதாயமானதாகவும், அத்தியாவசியமானதாகவும் இருக்கும். குருவினால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.  குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். நினைத்ததை சாதித்திடக்கூடிய நிலை உண்டாகும். ராகுவின் அருளால் தொட்டதெல்லாம் வெற்றி ஏற்படும். இருந்தாலும், வியாபாரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமையில் சரியாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் அவசரத்தினால் இடம் கொடுக்காமல் ஒவ்வொரு வேலையையும் யோசித்து செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் யாரையும் பகைத்துக் கொள்வது நன்மையாக இருக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும். குடும்பத்தில், வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகும். பிரச்னை நீங்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விவசாயி அக்கறையுடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: செப். 24.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 30. அக். 3, 6, 12, 15.பரிகாரம்:  உலகளந்தப் பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்; செயல்களில் தெளிவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் அதிர்ஷ்ட மாதம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். நீண்ட காலமாக நீங்கள் கண்டு வந்த கனவுகளை நனவாக்குவார். உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செய்துவரும் தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். சகோதரர்களால் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். இடம் வாங்கும் முயற்சி பலிக்கும். வங்கியில் கேட்டிருந்த லோன் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான காலமாக இது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். சுக்கிர பகவானின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை, வாகனம் வாங்கும் யோகம், சுக போக பாக்கியம் உண்டாகும். உங்கள் நிலையில் இக்காலம் யோகமான காலம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ராசிநாதன் மறைவு பெறுவதால் விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நிதானமும் கவனமும் இருப்பது நல்லது.சந்திராஷ்டமம்: செப். 24.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 21, 27, 30. அக். 3, 9, 12.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அனுஷம்: நிதானமாக செயல்படும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். சனி பகவானின் வக்கிர நிலையால் அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலம் உங்களுக்கு முன்னேற்றமான காலம். ராகு, பிள்ளைகள் வழியே சங்கடங்களையும், பூர்வீக சொத்தில் பிரச்னைகளையும் உண்டாக்கி வந்தாலும், குரு பகவானின் பார்வை உங்கள் நிலையை மேம்படுத்தும். வரவு செலவில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரம், தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். எதையோ இழந்ததுபோல் அவதிப்பட்டு வந்த நிலை மாற்றம் பெறுவீர்கள்.  உங்களுடைய முயற்சி இப்போது அதிகரிக்கும். நினைத்ததை அடைய வேண்டும் என்று தைரியமாக செயல்படத் தொடங்குவீர். அதற்கேற்ற காலமாக இக்காலம் இருக்கும். குரு பகவானின் பார்வை உங்களுக்கு பலத்தை அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை விலகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோரால் உதவி, அனுகூலம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்து வருபவர்கள் முன்னேற்றம் காண முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். விவசாயிகள் கவனமுடன் செயல்படுவது அவசியம். குடும்பத்தில் கொண்டாட்டம் நிறைந்து காணப்படும். சந்திராஷ்டமம்: செப். 24, 25.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26. அக். 3, 8, 12, 17.பரிகாரம்: சிவ பெருமானை வழிபட சங்கடம் யாவும் விலகும். நன்மை அதிகரிக்கும்.கேட்டை : புத்திசாலித்தனத்துடன் கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். சூரியனால் அரசு வழி முயற்சி யாவும் வெற்றியாகும். இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். உறவுகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகப் பணியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். ஒரு சிலருக்கு விருப்பப்பட்ட இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு மேம்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும்.  சுக்கிர பகவான் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நீடித்து நிலைக்கும். பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும். குரு பகவானின் சஞ்சார நிலையும் பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். இக்காலம் உங்களுக்கு பொற்காலம். இருப்பினும் ராசிநாதன் 8 ம் இடத்தில் மறைவு பெறுவதால் செயல்களில் நிதானமும் அவசியமும் தேவை. மாணவர்களுக்கு இக்காலம் யோகமாக இருக்கும். ஆசிரியர்களிடம் பாராட்டுப்பெறுவீர்கள். சுயதொழில் செய்து வருபவர்கள், பணியாளர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். தடைபட்ட முயற்சி நடந்தேறும்.சந்திராஷ்டமம்: செப். 25, 26.அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.பரிகாரம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.

தனுசு: மூலம்; திடமான செயல்பாடும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். கேதுவும், ராகுவும் கேந்திர பலம் பெறுவதால் விருப்பம் யாவும் பூர்த்தியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலக ஆரம்பிக்கும். பணியாளர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வெளிநாட்டு முயற்சி அனுகூலமாகும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் லாபம்தரும். வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தவர்களுக்கு எண்ணம் நிறைவேறும். உங்கள் ஜீவனாதிபதி புதன் உங்களுக்கு நன்மை புரிவார். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்திருந்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான பணம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர். சுய தொழில், வேலைகள் செய்து வருபவர்களுக்கு முயற்சிக்கும், உழைப்பிற்கும் ஏற்ற வருமானம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சுக்கிர பகவானின் பார்வையால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் தொடரும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள்  இருந்த பிரச்னை விலகும். வியாபாரத்தில் வருமானம் உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.  செவ்வாய் பகவான் சஞ்சரித்து வருவதால் செயல்களில் நிதானம் வேண்டும். எந்த ஒரு வேலையிலும் உங்களுடைய கவனம் நேரடியாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது இந்தக் காலத்தில் மிகவும் அவசியம். விவசாயிகள் கவனமுடன் செயல்படவும். சந்திராஷ்டமம்: செப். 26, 27.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 25, 30. அக். 3, 7, 12, 16.பரிகாரம்: விநாயகரை வழிபட வினை தீரும். நன்மைகள் உண்டாகும்.பூராடம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை லாபமாக்குவார். எதிர்பார்த்த வரவை உண்டாக்குவார். செய்துவரும் தொழில், பார்த்து வரும் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷத்தை அதிகரிப்பார். இந்த நேரத்தில் குரு பகவானின் பார்வைகள் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை நீக்கி வைக்கும். எதிர்பார்த்த இட மாற்றத்தையும், பதவி உயர்வையும் உங்களுக்கு வழங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைக்கும். சுபச் செலவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்குவரும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நல்லதுக்கு அடித்தளமிடும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்குரிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், மருத்துவம், கெமிக்கல், காவல் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் நிதானமாக செயல்படுவது நன்மையை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்கள் சந்தோஷப்படக்கூடிய அளவிற்கு சாதகமான பலன்கள் இந்த மாதத்தில் உண்டாகும். வேலைக்காக எழுதிய தேர்வு முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும்.சந்திராஷ்டமம்: செப். 27, 28.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 24, 30. அக். 3, 6, 12, 15.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்: தெளிந்த ஞானம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். உங்கள் திட்டம் எல்லாம் வெற்றியாகும். முயற்சி எல்லாம் பலிக்கும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் வேலை ஆதாயத்தில் முடியும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்ட முயற்சி நடந்தேறும். தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குரு பகவானின் பார்வையால் வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். புத பகவான் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். சுக்கிர பகவானின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை  நிறைவேற்றுவீர். உறவுகளால் ஆதாயம், அனுகூலம் என்ற நிலை ஏற்படும். ஒரு சிலர் தாங்கள் செய்துவரும் தொழிலை வெளியூரில் புதிய கிளைகள் தொடங்கி விரிவு செய்வீர்கள்.சந்திராஷ்டமம்: செப். 28. 29.அதிர்ஷ்ட நாள்: செப். 19, 21, 30. அக். 1, 3, 10, 12, பரிகாரம்: நவகிரக் வழிபாட்டால் வாழ்வில் நன்மை உண்டாகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்; நீதிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதனால் குடும்பத்தில் நெருக்கடி இல்லாமல் போகும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். ராகுவினால் முயற்சி யாவும் வெற்றியாகும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் உங்களிடம் இருந்த பலவீனம், பயம் விலகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். சாதாரண முயற்சி கூட உங்களுக்கு வெற்றியை உண்டாக்கும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். விஐபிகள் ஆதரவு, உறவினர்கள் ஒத்துழைப்பு செயல்கள் லாபமாக்கும். இதுவரையில் இருந்த பாதிப்பு இப்பொழுது இல்லாமல் போகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்குரிய  தகவல் வரும். மாதத்தின் பிற்பகுதியில் புத பகவான் உங்களுக்கு யோகத்தை வழங்கிட இருப்பதால் இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். விரும்பிய இடத்தை உங்களால் வாங்க முடியும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். சந்திராஷ்டமம்: செப். 29அதிர்ஷ்ட நாள்: செப். 17, 19, 26, 28. அக். 1, 8, 10, 17.பரிகாரம்: சூரியனை வழிபட்டுவர வாழ்வில் வளம் உண்டாகும்.திருவோணம்: தெளிந்த மனதுடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து வந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். ராகு, குரு, செவ்வாயின் செயல்பாடு உங்கள் உச்சத்தை தொட வைக்கும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு என்பது இருக்கும். அவையாவும் நிறைவேறும். ஒதுக்கி வைத்த வேலையெல்லாம் இப்பொழுது நடைபெறும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும்.  தொழிலில் இருந்த போட்டி, பிரச்னை, மறைமுகத்தொல்லை குறையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழப்பார்கள். இழுபறியான வழக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் வாங்க முடியாமல் இருந்த இடத்தை வாங்கி அதில் குடி புகுவீர்கள். எடுக்கின்ற முயற்சி யாவும் வெற்றியாகும். முடங்கிக்கிடந்த தொழில் இப்பொழுது முன்னேற்றத்தை நோக்கி நகரும். அதனால் வருமானம் உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். குழந்தைகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். காவல், இராணுவம், விவசாயம், மருத்துவம், கெமிக்கல் போன்ற துறைகளில் பணிபுரிந்து வருவோரின் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்கமான நிலை ஏற்படும். உறவுகள் உங்களைத் தேடிவரும், தெய்வ அருளும், பெரியோரின் ஆசியும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: செப். 29, 30.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 20, 26. அக். 2, 8, 11, 17.பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் கூடும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம். இதுவரை நிறைவேறாமல் இருந்த முயற்சி இப்பொழுது நிறைவேற ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி, பிரச்னை நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்குவரும். சமூகத்தில் மற்றவரால் மதிக்கக்கூடிய நிலை உண்டாகும். குரு பகவானின் பார்வையால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். தெய்வ அருளும், பெரியவர்கள் துணையும் உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களுக்கு ஏற்பட்ட தடை விலகும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். ராகுவினால் நீங்கள் செயல்படும் வேலை ஒவ்வொன்றும் உங்களுக்கு லாபத்தை உண்டாக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைபடக்கூடிய நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். புத பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்போரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இனக்கமான நிலை ஏற்படும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: செப். அக். 1அதிர்ஷ்ட நாள்: செப். 17, 18, 26, 27. அக். 8, 9, 17.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்; அமைதியாக செயல்படும் உங்களுக்கும்  ஒரு சில சங்கடங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், பிறக்கும் புரட்டாசி மாதம் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்தும் மாதம். சூரியன், கேது சஞ்சரிப்பதால் சிக்கல், நெருக்கடி ஏற்படும் என நீங்கள் பயப்பட வேண்டாம். குரு பகவானின் பார்வையால் அனைத்து சிக்கலில் இருந்து வெளிவருவீர்கள். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையை உணருவீர்கள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். நீங்கள் யார் என்பதை உலகம் காணும். அதே நேரத்தில் பணிபுரியும் இடத்தில் வேலைபளு என்பது கூடுதலாகவே இருக்கும். அதில் ஆதாயமும் இருக்கும். சுக்கிரனின் சஞ்சாரத்தினால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். செய்து வரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலிக்கும். இருப்பினும், வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பதும், அரசு பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக பணியாற்றுவதும் நல்லது. நியாயமான வருமானத்திற்கு மேற்பட்ட எந்த வருமானத்திற்கும் இந்த மாதத்தில் ஆசைப்பட வேண்டாம். அதனால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புத பகவானின் சஞ்சாரத்தினால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கேட்ட இடத்திலிருந்து கேட்ட உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 1, 2.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 18, 26, 27. அக். 8, 9, 17.பரிகாரம்:  லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் கூடும்.சதயம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன், கேது, சூரியன். குரு. செவ்வாய் ஆகியோரின் சஞ்சாரத்தினால் உங்கள் மனக்குழப்பம் அதிகரிக்கும். இது உங்களுக்கு சோதனைக் காலம். குலதெய்வத்தின் அருளால் பொறுமையுடன் இருந்து சாதனை படைப்பீர்கள். கோயில் வழிபாட்டினால் நிம்மதியும் திருப்தியும் உண்டாகும். குரு பகவானின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கும், ஜீவன ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். உங்கள் திறமை பிறரால் அறியப்படும். தொழிலில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து முடித்திடக்கூடிய அளவிற்கு செல்வாக்கு உயரும். செலவு செய்து ஒரு சிலர் தங்கள் பெருமையை  நிலைநாட்டிக்கொள்வீர். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலமும், வர்த்தகம் புரிவோருக்கு பணியாளர்கள் துணையும் உண்டாகும். இந்த நேரத்தில் புத பகவானின் சஞ்சாரமும், சுக்கிர பகவானின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பதால் சட்ட விவகாரங்கள்,  அனுகூலமாகும். வீண் வம்பு வழக்குகள் காணாமல் போகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய இடம் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் அனுகூலம்,  மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: செப். 2, 3.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 22, 26, அக். 4, 8, 13, 17.பரிகாரம்: வராகி வழிபாடு வளம் சேர்க்கும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: நாளை நடப்பதை அறியக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்படக்கூடிய மாதம்.  குருபகவான் பார்வை உங்களுக்கு யோகத்தை உண்டாக்கும். உங்கள் நிலை உயரும். எந்தவிதமான நெருக்கடியானாலும் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டாகும். அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு குரு பகவானின் பார்வைகள் உண்டாவதால் வம்பு வழக்குகள் சாதகமாகும். உடல்நிலை சீராகும். தடைபட்ட வேலை மீண்டும் நடைபெறும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.  வருவாய் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் உண்டாகும். பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் தோன்றும். விவசாயிகள்  கவனமாக செயல்படுவதும், காவல்துறையில் இருப்பவர்கள் கடமையுணர்வுடன் பணியாற்றுவதும் அவசியம். இல்லையெனில் வேலையில் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். புதனின் அருளால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: அக். 3.அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26, 30. அக். 8, 12, 17.பரிகாரம்: நவக்கிரக குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்; தெளிந்த ஞானமும் வாழ்வியல் குறித்த புரிதலும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிநாதன் நன்மைகளை உண்டாக்குவார். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். பெரியோரின் ஆதரவு இக்காலத்தில் உங்களை வழிநடத்தும். தெய்வத் தலங்களுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் பாக்கியமும் ஒரு சிலருக்கு ஏற்படும். புதிய வீடு கட்டும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகளை எல்லாம் நடத்தி முடிப்பீர். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். அதனால் சில சங்கடங்களும் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஈடுபடும் வேலைகளில் எதிர்மறையான பலன்  ஏற்படக்கூடும். சட்ட ரீதியான சிக்கல்களையும் சந்திக்க வேண்டி வரும். கவனமாக செயல்படுவது நல்லது. திடீர் அதிர்ஷ்டமும் எதிர்பாராத வரவுகளும் மாணவர்கள் படிப்பில் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும்.  விவசாயிகள் அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: அக். 4.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 30. அக். 3, 12.பரிகாரம் ஆலங்குடி குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரட்டாதி: நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். கேந்திர ஸ்தானங்களில் ராகு, செவ்வாய், சூரியன், கேது சஞ்சரிக்கும் நிலையில் ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சுக்கிரனால் குழப்பம் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். தவறான நண்பர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வர். குரு பகவானின் பார்வை  திருமணத்திற்கு  காத்திருந்தவர்களை மணமாலை சூட வைக்கும். நட்பு வட்டத்தில் இருந்த பிரச்னை விலகும். விலகிச்சென்றவர் மீண்டும் உங்களைத் தேடிவருவர்.   கூட்டுத்தொழில் லாபத்தில் செல்லும். பெரியோரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அதனால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு  ஏற்படும். புதன் பகவான் அருளால்  ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். இருப்பினும், ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஒவ்வொரு முயற்சியிலும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலைகள் இழுபறியில் முடியும். அதனால் உங்களால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்வது நல்லது. விவசாயிகளுக்கு முன்னேற்றமான மாதமாகும்.சந்திராஷ்டமம்:அதிர்ஷ்ட நாள்: செப். 17, 21, 26, 30. அக். 3, 8, 12, 17.பரிகாரம்:  முன்னோர் வழிபாட்டால் சங்கடம் விலகும். நன்மைகள் உண்டாகும்.ரேவதி: சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் உழைப்பால் வெற்றி அடையும் மாதம். அக் 10 முதல் உங்கள் நட்சத்திரநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒப்பந்தம் வரும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றி அடையும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய நிலை இக்காலத்தில் உங்களுக்கு ஏற்படும். குரு பகவானின் பார்வைகளால் உங்கள் வாழ்க்கை வளம் அடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர். கையில் எடுக்கும் வேலைகளில் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். பழைய கடன்களை எல்லாம் அடைத்து நிம்மதி அடையக்கூடிய நிலை ஏற்படும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். தாய்வழி உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கின்ற அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.சந்திராஷ்டமம்: அக். 5, 6.அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 3, 12, 14.பரிகாரம்: திருக்கோட்டியூர் சவுமிய நாராயணரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும். 


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement


    • Dinamalar Events


    Dinamalar